Latest Updates

பெரியோர்களே .... தாய்மார்களே ! - புத்தகம் ஒரு பார்வை

பெரியோர்களே .... தாய்மார்களே ! - புத்தகம் ஒரு பார்வை 

தமிழகத்தின் அரசியல் வரலாற்றை முழுவதும் அறிய எழுத்தாளர் ப.திருமாவேலன்,  அவர்கள் எழுதிய பெரியோர்களே... தாய்மார்களே என்ற அரசியல் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

வரலாற்றில் எழுதப்பட்ட உண்மைகளை விட மறுக்கப்பட்ட உண்மைகள் தான் அதிகம் - அந்த வரலாற்றை  அறியும்போது சமூக வாழ்வியலை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஏன் பெரியோர்களே... தாய்மார்களே ! புத்தகத்தை படிக்க வேண்டும் ?
  • காங்கிரஸ் கட்சியின் தேசியவாதம் 
  • கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்கப்பார்வை 
  • நீதிக் கட்சியின் சமூக நீதி 
  • திராவிட இயக்கங்களின் சமூக சீர்திருத்தம் 
  • தமிழ் தேசியவாதிகளின் சாகச உணர்வுகள் 
- என அனைத்து இயக்கங்களின் அரசியல் நிகழ்வுகளை ஆராய்ந்து 
வெளியிடப்பட்ட அரசியல் பெட்டகம் தான் எழுத்தாளர் ப.திருமாவேலன்,  அவர்கள் எழுதிய பெரியோர்களே... தாய்மார்களே! என்ற புத்தகம்.

ரஷ்யப் புரட்சிக்கு முன்பே தமிழகத்தில் கம்யூனிசம் எவ்வாறு பரவியது, பெரியாருக்கு முன் திராவிட சிந்தனைகளை உருவாக்கயவர் யார்? இப்படி நாம் அறியா பல அரசியல் நிகழ்வுகளை இந்நூல் விளக்குகிறது.


 பெரியோர்களே... தாய்மார்களே ! புத்தகத்தில் எந்த தலைவரை பற்றி அறியலாம் ....

இப்புத்தகம் வெறும் வரலாற்றுப் பார்வையில்லாமல், 
திரு.வி.க,வா.ஊ.சி , வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய சிவா, மறைமலை அடிகள், முத்து லட்சுமி  ரெட்டி, காமராசர், சத்தியமூர்த்தி, அண்ணா, கருணாநிதி, 
எம்.ஜி .இராமச்சந்திரன், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் 
எப்படி தலைவர்கள் ஆனார்கள்? 
அவர்கள் செய்த தியாகங்கள்  என்ன? 
அரசியல் தலைவர்களின் தனிமனித வாழ்க்கைமுறையும் தெளிவாக கூறுகின்றது.  

பெரியோர்களே... தாய்மார்களே ! புத்தகத்தின் தனிச்சிறப்பு 

  • புள்ளி விபரங்கள், ஆண்டுகள் என மற்ற வரலாற்று புத்தகங்களை போன்று நம்மை குழப்பாமல், எளிய முறையில் நாம் அனைவரும் அறியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.
  • நமது தமிழ் சமூகத்தின் வாழ்வியலை அறிய, கலை, அறிவியல், தொழில்நுட்பம் & மேலாண்மை என எல்லாத் துறைகளிலும் எப்படி தமிழ் சமூகம் சிறப்பாக விளங்கியது என்பதை அறிய இப்புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.
  • இந்நூல் ஜூனியர் விகடனில் வெளியிடப்பட்ட சிறந்த நூல் ஆகும்.
பெரியோர்களே... தாய்மார்களே ! நூலின் ஆசிரியர் 
இளம் அரசியல்வாதிகளுக்கும், இளைஞர்களும், மாணவர்களும் 
அரசியல் அடிப்படை முதல் ஆட்சிவரை அறிய கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் அரசியல் ஏன் அவசியம்? என இப்புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

பெரியோர்களே... தாய்மார்களே’ மூலம், தமிழக அரசியல் வரலாறை வாசிக்க அனைவரும் வாருங்கள்....


பெரியோர்களே... தாய்மார்களே ! புத்தகத்தை 
இணையத்தில் வாங்க 
விகடன் 


Periyorgalae Thaimargalae (Tamil Edition) 

Kindle Edition




Youtube-ல் கேக்க (Vikatan Audio)



நன்றி !!!




2 comments: