கொரோனாவை அழிக்கும் மருந்து ....
கொரனோ எனும் உயிர்கொல்லி
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பல நாடுகளின் மருத்துவமனைகள் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளினால் நிரம்பிவருகின்றது. தற்போதுவரை பலஆயிரம் மக்கள் இந்நோயினால் இறந்துள்ளனர். வளர்ந்த நாடுகளின் மருத்துவ வசதிகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை. தற்போதுவரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் இல்லை. பல நாடுகள் கொரோனவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் கொரோனா எனும் கோவிட்-19 நோயை உயிர்கொல்லி நோய் எனது அறிவித்து உலகநாடுகளை எச்சரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து உங்களை காத்துக்கொள்வது (முன்னெச்சரிக்கைகள்)
- நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். (அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள்). கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.
- டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள்.
- கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள்.
- காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.
கொரோனாவை வெல்ல சுய ஒழுக்கம் மட்டுமே தீர்வு
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம். இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல முயற்சிகளை செய்துவருகின்றன.
- நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள்.
- அரசுகள் சொல்லிய அறியுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்றவேண்டும்.
- தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
- இன்றுவரை இதற்கனா மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதால் எச்சரிக்கையும் சுகாதாரமும் மட்டும் தான் நம்மை காப்பாற்றும்.
- நோய் எதிர்ப்புசக்தியுள்ள உணவு பொருட்களை கண்டிப்பாக அனைவரும் உட்க்கொள்ளவேண்டும்.
- சிறுவர்கள், முதியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது மிகவும் அவசியம்.
சுயஒழுக்கம் தான் ஒரே தீர்வு
இந்தியர்கள், தமிழர்கள் உலகிற்கே பல நல்ல வாழ்வியல் முறைகளை கற்றுத்தந்தவர்கள்.
யோகா,தியானம் என நல்ல முறைகளை உலகிற்கே தந்தவர்கள் நாம்.
நாம் அனைவரும் நோய் பரப்பும் காரணியாக மாறாமலிருக்க, அனைவரும் தங்கள் வீடுகளில் இருத்தல் வேண்டும்.
உங்களுக்கு உதவி செய்ய தான் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் காவல்துறையினர் மக்கள் பணி செய்துவருகின்றனர்.
சுயஒழுக்க முறைகளையும், சுத்தம் மற்றும் சுகாதார வாழ்வியலை என்றும் தொடருவோம்.
கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் குணமாக நாம் அனைவரும் அரசுகள் சொல்லிய அறிவுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்றுவோம்.
தனிமைப்படுவோம் !!!! கொரோனாவை வென்றெடுப்போம் !!!
நன்றி !!!!
Good info...
ReplyDelete