Latest Updates

நன்றி (மறந்த) என் சமூகமே - மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை வணங்குங்கள்... மனிதம் போற்றுங்கள்...

நன்றி (மறந்த)  என் சமூகமே - மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை 
வணங்குங்கள்... மனிதம் போற்றுங்கள்...


கடந்த இரு தினங்களாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி அனைவரது மனங்களிலும் யோசிக்கவைத்துள்ளது.

 ஒரு மருத்துவரின் மரணம் அனைத்து வகை ஊடகங்களிலும் பேசும்பொருளாய் மாறியது...

கொரோனா நோயின் பாதிப்பால் உலகமே அச்சத்தில் உள்ளவேளையில் கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுக்காக்க மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் காவல் துறை என அனைவரும் நமக்காக போராடிவருகிறார்கள்...



சென்னையில் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இக்கடினமாக நேரத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய மக்களாகிய நாம்.. இவ்வாறு நடுந்துகொள்ள கூடாது..

சில மக்களின் சுயநலம் மனிதநேயத்தை கொள்ளுகின்றது... அதுவும் தமிழகத்தில் நடந்து இருப்பது வேதனையளிக்கின்றது.

எதிரிகளிடமிருந்து நாட்டை காக்கும் ராணுவ வீரர்களை போல் கொரோனா நோயிலிருந்து மக்களை காக்க மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து நமக்காக போராடிவருகின்றனர்..




தங்களின் குடும்பங்களை பிரிந்து நமக்காக பணி செய்யும் அனைத்து 
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்களின் சேவை போற்றுதலுக்குரியது...


மக்கள் அறிந்து கொள்ளவேண்டியவைகள்:

1. இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா  வைரஸ் பரவாது..

2. இறந்தவர் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவர். அவரை மருத்துவராக பார்க்காவிட்டாலும் மனிதனாக மட்டுமாவது பார்த்திருக்கலாம்.

3.  மருத்துவர்களின் கடின உழைப்பால் மறு பிறவி அடைந்தேன் : கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

4. அரசு சொன்ன விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்

5. மனிதநேயத்துடன் செயல்படுங்கள்


தமிழக அரசியிடம் ஒரு வேண்டுகோள் : 

கொரோனாவால் மருத்துவர்கள் இறந்தால் அவர்களை அரசு மரியாதையோடு நல்அடக்கம் செய்ய வேண்டும்.

குறைந்தது மாவட்ட மட்டத்திலாவது அதிகாரிகள் வந்திருந்து மரியாதை செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களின் சேவைக்கு நாம்  செய்த நன்றியாகும்.

ஒடிசா அரசு கூறியதுபோல் கொரோனா தடுப்பு பணியில் இறக்கும் மருத்துவர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை  தியாகிகளாக கருதி அரசு மரியாதையுடன் நல்அடக்கம் செய்ய வேண்டும்.

மருத்துவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்..

ஒரு மருத்துவரின் வேதனை ...


நன்றி (மறந்த)  என் சமூகத்திற்கு !!


களத்தில் அன்று மாதிரி சேகரிக்க சென்றோம்,
கற்களால் அடித்தாய்,
தொடர்ந்து பணி புரிந்தோம்..

மருத்துவமனையில் பரிசோதை செய்யச்சென்றோம்,
காரி உமிழ்ந்தாய்,
தொடர்ந்து பணி புரிந்தோம்..

இறந்த என் சக மருத்துவனுக்கு புதைக்க இடமில்லை  என 
சாலையில் வைத்துச் சென்றாய்,
தொடர்ந்து பணி புரிந்தோம்..

சடலமாக இருந்த எம்மூத்த மருத்துவரை அடக்கம் செய்ய 
மறுத்து, தடுத்து அடிக்கிறாய்,
தொடர்வோம் எம் பணியை!!

நன்றி (மறந்த)  என் சமூகமே !

அன்று கை தட்டினாய் !
விளக்கேற்றினாய் !
எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு
 மக்களை காக்க போராடினோம் ...

இன்று எம் சடலத்தை வீதியில் வைத்து
 விரட்டி அடிக்கிறாய்...

நன்றி (மறந்த)  என் சமூகமே..

என்ன நடந்தாலும் மக்களுக்கு சேவைசெய்வோம் என்று ஒவ்வரு மருத்துவரும் உறுதியுடன் போராடிவருகிறார்கள்..

அவர்களுக்கு எங்களின் நன்றிகள்...
உங்களின் சேவை 

உங்களுடன் நாங்கள்  இருக்கிறோம்...


மனித இனமே சுயநலம் தவிர்த்து பொது நலம் காணுங்கள்...
உங்களுக்காக போராடும் மருத்துவர்களின் சேவை  போற்றுதலுக்குரியது..

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்களின் சேவை போற்றி  வணங்குங்கள்..


அரசின் விதிமுறைகளை பின்பற்றுவோம்...

கொரோனவிலிருந்து மீள்வோம்...





















1 comment: