Latest Updates

காற்றை அறுவடை செய்யும் சிறுவன் - ஆஸ்கர் வாங்க தகுதியான படம்... காற்றை வசப்படுத்திய ஒரு உண்மை கதை..


காற்றை அறுவடை செய்யும் சிறுவன் --காற்றை வசப்படுத்திய ஒரு உண்மை கதை.. ஆஸ்கர் வாங்க தகுதியான படம்...

தென்கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள்  என்றவுடன்  நமக்கு ஞாபகம் வருவது, வறுமை, மாறுப்பட்ட வாழ்வியல் தான்.. அப்படி ஒரு ஆப்பிரிக்கா நாடான மலாவி, அதிக மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு ஏழ்மையான நாடாகும்.. மலாவியில்  நடந்த ஒரு உண்மைக்கதை தான்  இந்த படம் The Boy Who Harnessed the Wind. 
ஒரு சிறுவன் தனது திறமையான முயற்சியினால் எப்படி தனது கிராமத்தை வறுமையில் இருந்து மீட்டான் என்ற ஒரு சுவாரசியமான உண்மை கதையை பார்க்கலாம்..



வாங்க படம் பார்க்கலாம் ...


மலாவியின் ஒரு கிராமமனா  கசுங்குவில் பிறந்த வில்லியம் காம்கவாம்பா   13 வயது இளம் பள்ளி மாணவர், அவர் அருகிலுள்ள கிராமமான விம்பேவில் வசிக்கும் விவசாயிகளின் குடும்பத்தில் இருந்து வருகிறார். அவனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் வாழ்ந்துவந்தான்...

அவனுக்கு பள்ளிக்கூடம் செல்வதும், படிப்பதும் மிகவும் பிடிக்கும், ஒரு முறை அவனது அப்பா அவனுக்கு புதிய யுனிபோர்ம் வாங்கித்தர மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.. தாங்கள் கஷ்டப்பட்டாலும் வில்லியமை பள்ளிக்கு அனுப்பி ஊக்கப்படுத்தினார்கள். 

வறுமை, உள்நாட்டு அரசியல், ஆப்பிரிக்க  மக்காசோள விவசாயம், பள்ளி கல்வி, நட்பு, அன்பு, என வாழ்வின் அனைத்து தருணங்களையும் மனம் நெகிழும் விதம் சொல்லும்  ஒரு உண்மை கதை.

புத்திசாலியான வில்லியம் தனது நண்பர்கள் மற்றும் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களின்  ரேடியோக்களை சரிசெய்வதிலும் ஈடுபடுகிறார், மேலும் தனது ஓய்வு நேரத்தை உள்ளூர் ஜன்கியார்ட் வழியாக மீட்கக்கூடிய மின்னணு பாகங்களுக்காக செலவிடுகிறார்.

விவசாய குடும்பம் என்பதால் 
 அவரது கல்விக் கட்டணத்தை செலுத்த பெற்றோரின் இயலாமை காரணமாக அவர் விரைவில் பள்ளிக்குச் செல்ல முதல்வரால்  தடை விதிக்கப்பட்டிருந்தாலும். வில்லியம் தனது அறிவியல் ஆசிரியரின் உதவியுடன் பள்ளியின் நூலகத்தை பயன்படுத்த அனுமதிபெற்று  . அங்கு அவன்  மின் பொறியியல் மற்றும் ஆற்றல் உற்பத்தி பற்றி அறிந்து கொள்கிறார்.

வில்லியம் பகலில் தனது தந்தைக்கு உதவியாக வயலில் வேலைசெய்தலும் அவனது எண்ணம் முழுக்க அவனது பள்ளி நூலகத்தை சுற்றியே இருந்தது. அங்கு படித்த Using Energy என்ற புத்தம் அவனுக்கு மின்சாரவசதி இல்லாத தனது கிராமத்தில் சிறிய காற்றாலையை உருவாக்க தூண்டியது..



வில்லியம் எப்படி  கனவை துரத்தி வெற்றி அடைந்தான் என்பது தான் மிகவும் சுவாரசியமான கதை ..

தன் இலக்கை அடைய வில்லியம் செய்த முயற்சிகள் ... நம் அனைவருக்கும் உத்வேகம் தரும்...

நல்ல படம் ....  மாணவர்களுக்கு ஊக்கம் தரும் ...
 
காற்றை அறுவடை செய்யும் சிறுவன்

வெறும் படம் மட்டுமல்ல ... ஏழைச்சிறுவனின்  வெற்றியை  கொண்டாடும்  வாழ்வியல் நிகழ்வு ...  

தமிழ்   வானவில்லின்  மதிப்பெண் : 9/10

நன்றி !!!








3 comments: