இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு ?
இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான மிதாலி ராஜ், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மித்தாலி ராஜ் :
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீராங்கனை மிதாலி ராஜ்.
இவர் இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான பல வெற்றிகளை பெற்றவர்.
மிதாலி தனது பத்தாம் வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். தனது 17 ஆவது வயதில் இந்திய கிரிக்கெட்அணிக்காக விளையாடுவதற்குத் தேர்வானார். இவர் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்துள்ள இவர் 1௦௦௦௦ அதிகமான ரன்கள் எடுத்து மிகப்பெரிய சாதனையை செய்தவர்.
மகளிர் கிரிக்கெட்டில் பல முக்கிய போட்டிகளில் வெற்றிபெற்று.. நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.
ஒருநாள் பன்னாட்டுத் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு முறை 50 ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார். மேலும் அதிகமுறை 50 ஓட்டங்கள் எடுத்த வீராங்கனை எனும் சாதனைகளைப் படைத்தார்.
இவரின் சேவையை பாராட்டி இந்தியஅரசு 2015 ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளவுரவப்படுத்தியது.
இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தனது ஓய்வை அறிவித்தார்.
அவர் தனது வாழ்வில் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்...
No comments