கொரோனா நோய் தடுப்பு பணியில்- தன்னார்வலராக செயல்பட - தமிழகஅரசு இளைஞர்களுக்கு அழைப்பு.
கொரோனா நோய் தடுப்பு பணியில்- தன்னார்வலராக செயல்பட - தமிழகஅரசு இளைஞர்களுக்கு அழைப்பு...
ஜல்லிக்கட்டு, சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற நேரங்களில் தமிழ் நாட்டை மீட்டுஎடுத்த தமிழ் இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.
கொரோனா நோய் வேகமாக பரவி வரும் இவ்வேளையில் தமிழக அரசுடன் இணைந்து போர்க்கள அடிப்படையில் நோய்த்தடுப்பு பணியில் பணி புரிய
ஆர்வமாகவுள்ள தமிழ் இளைஞர்களுக்கு தன்னார்வலராக செயல்பட - தமிழகஅரசு அழைப்புவிடுத்துள்ளது.
எந்தந்த பணிக்கு தன்னார்வலராக செயல்பட -
தமிழகஅரசு அழைப்புவிடுத்துள்ளது.
தமிழகஅரசு அழைப்புவிடுத்துள்ளது.
- கால்சென்டர்
- வெளிநாட்டிலிருந்து திரும்பியவருடன் தொடர்பில் இருந்தவரை தேடும் பணி
- உணவு சமைத்தல்
- விளம்பர தகவல்கள் தயாரித்தல்
- வரிசை மேலாண்மை
- சுகாதாரம் மற்றும் தொற்றுநீக்கம்
- இணையதள / கைபேசி செயலியை தயார் செய்தல்
போன்ற பணிகளுக்கு மாவட்ட வாரியாக
தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள் .
தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள் .
கொரோனா வைரஸ் நோய் ஒரே நேரத்தில் பல இலச்சம் மக்களை உலகம் முழுக்க பாதித்துள்ளது .
வெள்ளம் போன்ற பிற இயற்கை பேரிடர்களில் தன்னார்வலர்கள் பணி புரிந்தது போல இப்பணி அல்ல.
தன்னார்வலர்கள் பணி கொரோனா வைரஸ் நோய்க்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைளை மேற்கொள்ளுதல் ஆகும்.
தன்னார்வலராக நான் என்ன செய்யவேண்டும்...
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உங்களின் தகவல்களை பதிவு செயுங்கள்...
முதலில் volunteer registration - ல் கிளிக் செய்து
உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து
Generate OTP மூலம் உங்கள் மொபைல் எண்ணை
உறுதி படுத்திகொண்டு ...
Volunteer Registration -ல் உங்கள் தகவல்களை தெளிவாக பதிவு செய்து இறுதியாக Submit செய்துகொள்ளுங்கள்...
மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு...
நீங்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் எனில் stopcoronatn.in எனும் இணையதளத்தில் உள்ளீடு செய்து, பிற பணியாளர் பகுதியில் உங்களுக்கு ஏற்ற பணியினை தேர்வுசெய்யலாம்.
வீட்டிலிருந்தே இப்பணியில் ஈடுபட முடியும்...
நீங்கள் வீட்டிலிருந்தவாறே, சமூக ஊடகங்களை திறம்பட இப்பணிக்கு
உபயோகப்படுத்த முடியும்.
Telegram Channel
– TN_Together_Against Corona and
@NHM_TN
என்ற ட்விட்டரில் உள்ள கொரோனா குறித்த செய்திகளை
உங்களுடைய பக்கத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு செய்யலாம்.
தேவைப்படுவோருக்கு உணவோ அல்லது பிற பொருட்களை வழங்க....
stopcoronatn.in
என்ற இணையத்தளத்தில் தன்னார்வலர் பதிவின் கீழ்,
நீங்கள் நன்கொடையாளர் என பதிவு செய்து
உங்களால் முடிந்த பணம், உணவு பொருட்கள் மற்றும்
மருத்துவ சாதனங்களைவழங்கலாம் ...
வாரூங்கள் !!!
தமிழக இளைஞர்களே !!!
கொரோனாவை விரட்டியடிப்போம் !!!
தமிழகத்தை காப்போம்.........
I want to work
ReplyDelete