கொரோனாவை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் !! டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு ! கொரானாவை விரட்ட கபசுர குடிநீர்
கொரோனா வை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு ! கொரானாவை விரட்ட கபசுர குடிநீர் !!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீரை பரிந்துரை செய்யத் தொடங்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
கபசுர குடிநீர் தயாரிக்க தேவையான பொருட்கள் !!
- சுக்கு,
- திப்பிலி,
- இலவங்கம்,
- ஆடாதொடை இலை,
- சீந்தில்,
- சிறுதேக்கு,
- வட்டத்திருப்பி வேர் (பாடக் கிழங்கு ),
- கோரைக்கிழங்கு,
- நிலவேம்பு,
- அக்கிராகாரம்,
- கற்பூரவல்லி இலை,
- கடுக்காய்,
- முள்ளி வேர்,
- கோஷ்டம்
- சிறுகாஞ்செரி வேர்
உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம்.
காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீர் உருவாக்கப்படுவதால் இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்பதும் சித்த மருத்துவர்களின் கூற்றாகும்.
கபசுரக் குடிநீர் தான் கொரோனாவுக்கு மருந்து என, எந்த சித்த மருத்துவரும் ஆதார பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றாலும் கூட, அதனை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் எனக் கருதி கபசுரக் குடிநீர் மீது பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
கபசுரக் குடிநீர் தயாரிப்பு செய்முறை
கபசுரக் குடிநீர் எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதன் பயன்பாடுகளை அறிய கீழே உள்ள லிங்கில் தொடரவும்....
Nice info....
ReplyDeleteNeeded information...
ReplyDelete