Latest Updates

ஆரோக்கிய சேது (Aarogya Setu) ஆப் - கொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்கும் ஆப்

ஆரோக்கிய சேது - கொரோனாவிலிருந்து 

உங்களை  பாதுகாக்கும் செயலி..

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த இந்தியா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற செயலியை(ஆப்) இந்தியா அரசு உருவாக்கியுள்ளது.

ஆரோக்கிய சேது செயலியின்  முக்கிய அம்சங்கள் 

1. ஸ்மார்ட் போன்களில் செயல்படும் இந்த செயலி, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் செயல்படும்.

2. ஆரோக்கிய சேது (Aarogya Setu) செயலியானது இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'National Disaster Management Authority'-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

3. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம்.

4.  ஆரோக்கிய சேது (Aarogya Setu) செயலியானது GPS மற்றும் Bluetooth-ன் சேவையைக் கொண்டு செயல்படும்.

5. கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால். செயலி மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரித்து பாதுகாக்கின்றது.

ஆரோக்கிய சேது (Aarogya Setu) செயலி செயல்படும்விதம்

1.  பதிவிறக்கம் :
 முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் ஆரோக்கிய சேது செயலியை தேர்வு செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

2. மொழிதேர்வு : 
செயலியை பதிவிறக்கம் செய்த உடன், தமிழ் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

3. செயலி விளக்கம் : 
பின்னர், இந்த செயலி எதற்காக பயன்படுகிறது. எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்படும்.

4. அனுமதி :
மொபைல் ப்ளூடூத், இயக்குவதற்கான அனுமதி, தகவல்களை அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கான அனுமதியை கேட்கும். அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்.

பின்பு இருப்பிடத்திற்கான அனுமதி, ஜிபிஎஸ் பயன்படுத்தி கொள்வதற்கான அனுமதியை கேட்கும், அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்.

5. செயலியின் விதிமுறைகள்
செயலியின் சேவை, விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் பற்றிய விளக்கம் இருக்கும். அதனை படித்துவிட்டு ஒப்பு கொள்ள வேண்டும்.

6. மொபைல் எண்ணை பதிவுசெய்தல் 
நமது மொபைல் எண்ணை கேட்கும். அதனை பதிவு செய்த உடன், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் , நமது மொபைல் போனுக்கு வரும். அதனையும் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

7. சுய விபரங்கள் 
செயலியில் நமது பெயர், வயது, தொழில், பாலினம், வெளிநாடுகளுக்கு சென்றோமா என்ற தகவல்கள் கேட்கப்படும். அதை பதிவு செய்ய வேண்டும். 

8. சுயசோதனை
தொடர்ந்து, நலமுடன் இருக்கிறோமா என்ற 20 நொடிகள் சுயசோதனை செய்யலாமா என்ற அனுமதி கேட்கும். இதற்கு பதிலளிக்கலாம். அல்லது பின்னர் பார்த்து கொள்கிறேன் என்ற வாய்ப்பை தேர்வு செய்யலாம்.

                        முதல் கேள்வி :  உங்களின் பாலினம்  (பதில் அளிக்க) ..

                   இரண்டாவது  கேள்வி : உங்களின் வயது   (பதில் அளிக்க) ..

                   மூன்றாவது   கேள்வி : பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் நீங்கள் சந்தித்தீர்களா ?
(i) இருமல், (ii) காய்ச்சல் (iii) சுவாசிப்பதில் சிரமம் 
(iv) மேலே எதுவும் இல்லை 
கண்டிப்பாக பதில் அளிக்கவும்.....

நான்காவது   கேள்வி : பின்வருவனவற்றை நீங்கள் எப்போதாவது பெற்றிருக்கிறீர்களா ?

(i) நீரிழிவு நோய் , (ii) உயர் இரத்த அழுத்தம்  (iii) நுரையீரல் நோய்  (iv) இருதயநோய் (v) மேலே எதுவும் இல்லை 
கண்டிப்பாக பதில் அளிக்கவும்.....

ஐந்தாவது  கேள்வி : கடந்த 14 நாட்களில் நீங்கள் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்திருக்க்கிறீர்களா?

(i) ஆம்  (ii) இல்லை , என கண்டிப்பாக பதில் அளிக்கவும்.....

இறுதியாக:

(i) Covid-19 க்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் நான் சமீபத்தில் தொடர்பு கொண்டேன் அல்லது வாழ்ந்தேன் 

 (ii) நான் ஒரு சுகாதார பணியாளர், பாதுகாப்பு கியர் இல்லாமல் 
Covid-19 உறுதிப்படுத்தப்பட்ட  வழக்கை ஆய்வு செய்தேன் 

 (iii)  மேலே எதுவும் இல்லை ,

என பதிவு செய்தவுடன் உங்களின் சுயபரிசோதை முடிவு வெளியிடப்படும்..


இது அனைத்தும் முடிந்த பின்னர், கொரோனா பாதித்த நபரின் அருகில் சென்றால், இந்த செயலி மூலம் எச்சரிக்கை செய்யப்படும்.

ஆரோக்கிய சேது (Aarogya Setu) செயலியை   

பதிவிறக்கம் செய்ய 

https://play.google.com/store/apps/details?id=nic.goi.aarogyasetu


நல்லதை பகிர்வோம் ... நலம் காப்போம் ....

நன்றி ....



1 comment: