செல்பி உதவிகள் - விளம்பர வாழ்வியலின் உச்சம்........கொரோனா செல்பிகள் ......
செல்பி உதவிகள் - விளம்பர வாழ்வியலின் உச்சம்........ கொரோனா செல்பிகள் ......
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்........
என் நண்பனின் முகநூல் பதிவிலிருந்து என்னை அறைந்த ஒரு புகைப்படத்தின் தொடர்ச்சி .........
முதலில் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்கின்ற குணம், மிகப்பெரியது அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்........
மேலே உள்ள புகைப்படம் இன்றைய வாழ்வியலை சற்று யோசிக்க வைத்துள்ளது....
ஒரு உண்மை கதை :
தங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட கிட் வேண்டுமா என ஒருவரிடம் கேட்க , அவர் வாடிய முகத்துடன் பார்த்து கேட்டார்.. புகைப்படம் எடுப்பீர்களா என்று ?
ஏன் அப்படி கேட்டீர்கள் என்று கேட்டதற்கு அவரின் பதில்
"நேற்று வேறொரு இடத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட கிட் கொடுத்து அதை வீடியோ & போட்டோ எடுத்துக்கொண்டார்கள்....
நான் ஒரு கூலி தினசரி வேலை பார்த்து வாழ்பவன்....
வேலை இல்லாத இச்சூழ்நிலை எங்களை பசியில் தள்ளியது.. அதனால் தான் என் பிள்ளைகளின் பசியை போக்க உங்களிடம் கையேந்துகிறேன்... என்றார்
நான் கையேந்தி நிற்பதை எனது பிள்ளைகள் பார்ப்பதை நான் விரும்பவில்லை..
தினசரி உழைத்து உண்டு கண்ணியமாய் வாழ்ந்த குடும்பம், உங்களின் விளம்பர செல்பியால் வேதனை பண்ணுவது ஏற்புதையது அல்ல....
தர்மம் செய்யுங்கள்.... அதே சமயம் அவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள்....
தமிழர் வாழ்வியலில் உதவி :
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது- திருக்குறள்
பொருள் :
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் சமம் ஆகாது....
இப்படி தமிழர்களின் வாழ்வியலில் பிறருக்கு உதவுதல் என்பது கடவுளுக்கு செய்யும் தொண்டாகும்...
தமிழ் மன்னர்களின் பல உதவிகளை வரலாற்றில் படித்திருப்போம்...
முல்லைக்கு தேர் கொடுத்த - வள்ளல் பாரி
மயிலுக்கு போர்வை தந்த - வள்ளல் பேகன்
என பல உதவிகளை அனைத்து உயிர்களுக்கும் செய்த மன்னர்கள் கூட அதை
பெருமையாக பேசவில்லை.. அவர்களை போற்றி பாடும் கவிஞர்களால் நாம் அறிகிறோம்....
வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியாது - என்பர் உதவியின் மேன்மை அறிந்தவர்கள்.. உங்களின் உதவிகளை பிறரிடம் சொல்லி பெருமையும், புகழும் பெறுதல்
செய்த உதவியை இழிவுபடுத்தும் செயலாகும்.
உதவுங்கள் உள்ளதால்...... பெற்று கொள்ளுங்கள் .... அன்பையும் .... நன்றியையும்.......
ஊக்குவிக்கும் செல்பிக்கள் :
பிறரை உதவி செய்ய வரவேற்கும் விதமாக சிலர் செல்பிக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்... அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
உங்களிடமும் ஒரு வேண்டுகோள், நீங்கள் புகைப்படம் எடுக்கும்போது
நீங்கள் உதவி செய்யும் நபரின் முகம், அடையாளங்கள் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.....
தர்மம் செய்யுங்கள்.... அதே சமயம் அவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள்....
உங்களால் பலர் உதவ முன்வரட்டும்...
கொடுக்கும் கைகள் இல்லாத கைகளுக்கு இறைவனகின்றன........
இல்லாதவர்களுக்கு உதவவேண்டியது, இருப்பவர்களின் கடமையே தவிர,
அதை ஊருக்கே போட்டோ எடுத்து கட்டவெட்டிய அவசியமில்லை...
சற்று யோசியுங்கள் ....
யார் மனதையும் .. புண்படுத்த இந்த பதிவு இல்லை ...
உங்களின் உதவிகளின் மேன்மையை அறியவே ....
தமிழர்களின் வாழ்வியலை அறிவோம்....
நன்றி ......
Soo selfish people
ReplyDeleteSoo selfish people
ReplyDelete