சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - புத்தக அறிமுகம்
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு புத்தக அறிமுகம்
எழுத்தாளர் : யுவால் நோவா ஹராரி
(தமிழில் - நாகலட்சுமி சண்முகம்)
கடந்த சில மாதங்களாக பலரால் பேசப்படும் ஒரு சிறந்த புத்தகம் சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
ஏன் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்?
மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்தளித்திருக்கிறது. எனினும் இந்த வளர்ச்சி தொடருமா? என்பது பற்றிய நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.
முதலாளித்துவம் எனும் பொருளாதார வளர்ச்சி ?
நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில: மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.
"பொருளாதார வளர்ச்சி என்றென்றும் தொடரும் என்று முதலாளித்துவம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள அனைத்து விஷயங்களுடனும் முரண்படுகிறது' என்கிறார் நூலாசிரியர் யுவால் நோவா ஹராரி .
யார் மனிதன் ?
"நம்மை நாமே கடவுளாக ஆக்கிக் கொண்ட நாம், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் இருக்கிறோம்.
நம்மையும் அறியாமல் நம்முடைய சக விலங்குகளையும், நம்மைச் சூழ்ந்துள்ள சூழல்மண்டலத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சொந்த வசதியும் மகிழ்ச்சியும்தான் நமக்குப் பெரிய விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் நாம் ஒருபோதும் மனநிறைவு அடைவதில்லை... இதைவிட அதிக ஆபத்தானது வேறெதுவும் இருக்க முடியுமா?' என்று மனிதகுல வளர்ச்சி என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதின் மீது எதிர்மறையான விமர்சனங்களை வைக்கிறார்.
குற்றம் ?
வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான். தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களை விட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை. வரலாற்றை திருப்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தான்? நம் மூதாதையரின் தவறுகளிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனித குலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்க தவறவில்லை இந்நூலாசிரியர்.
தனித்துவம் ?
மானிட வாழ்வியலின் கடினமான செய்திகளை எளிமையாகவும், சுவையாகவும் விளக்கும் சிறந்த நூல்.
நாம் வாழும் இன்றைய வாழ்க்கைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்கும் நூல்.
அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக்கொண்டு உள்ளே நுழையுங்கள்!
உலகில் பல சதையாளர்களால் பாராட்டப்படும், சிறந்த நூல். உதாரணமாக
"மனிதகுல வரலாறு குறித்த ஒரு சுவாரசியமான பதிவு இந்நூல். இதை படிக்கத் தொடங்கிவிட்டால் கீழே வைக்கவே மனம் வராது." - பில் கேட்ஸ்
30- மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு 10 லட்சத்திற்கும் மேல் அச்சிடப்பட்டுள்ளது இந்நூல் ..
மொழிபெயர்ப்பு நூலுக்கான அழகு அது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று நாம் படிக்கும் போது உணர்த்தக்கூடாது. தன் பணியை சிறப்பாக செய்துள்ளார் நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் .
நல்ல புத்தகம் ... சிறந்ததொரு எண்ணங்களை தரும்...
வாசிப்போம் நல்எழுத்துகளை !!
இந்நூலை இணையத்தில் வாங்கலாம்.. மற்றும் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்..
நன்றி !!
No comments