வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு தமிழக அரசு ஏற்பாடு
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு தமிழக அரசு ஏற்பாடு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் பெரும் பாதிப்பை சந்திதிருக்கும் வேளையில். உலகத்தின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவினால் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்கள் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும் அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும் தமிழக அரசு இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள்
nonresidenttamil.org
என்ற இணைய முகப்பில் தங்களின் தகவல்களை பதிவுகள் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி !
நன்றி !
No comments