Latest Updates

(மாஸ்க்) முகக்கவசங்களை பயன்படுத்தியபின் செய்யவேண்டிய... பாதுகாப்பு முறைகள்

(மாஸ்க்) முகக்கவசங்களை பயன்படுத்தியபின் செய்யவேண்டிய... பாதுகாப்பு முறைகள் 

கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் முகக்கவசங்களை எப்படி பாதுகாப்பான  முறையில் அப்புறப்படுத்துவதற்கான விளக்கம் தொடர்பான வீடியோ சென்னை மாநகராட்சி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் அணைத்து வகை முகக்கவசங்களை எப்படி பாதுகாப்பான  முறையில் அப்புறப்படுத்துவதற்கான
செய்முறைகள் விளக்கப்பட்டுள்ளது..


பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தில் பல கிருமிகள் பல்வேறு நேர அளவில் உயிருடன் இருக்க வாய்ப்புண்டு..

முகக்கவசங்களை பொது இடங்கள்  / வீடுகள் மற்றும் திறந்த குப்பைத்தொட்டிகளில் பொறுப்பின்றி ஏறிய வேண்டாம்..

கிருமி தொற்றிய முகக்கவசங்களில் சளி, எச்சில் போன்றவை இருந்து அது காற்று வழியே சுற்றுப்புறத்தில் பரவக்கூடும்..

ஒவ்வொரு முகக்கவசங்களையும் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். 

உதாரணமாக : 
1. துணியால் ஆன முகக்கவசம் 
ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் சரியான முறையில் துவைக்கப்பட்டு, சூரிய ஒளியின் வெளிச்சம் படும்படி காற்றில் காயவிடப்படவேண்டும்..

2.  அறுவை சிகிச்சை  முகக்கவசம் 

முகக்கவசத்தை கழட்டியவுடன் அதை உட்புறமாக மடித்து அதை ஒரு காகிதம் அல்லது பாலிதீன் பையில் சுற்றி ஒரு தனி குப்பை பையில் உடனே போட்டுவிடவேண்டும்..

3.  N 95  முகக்கவசம் 
பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை ஒரு பாலிதீன் பை அல்லது காற்று உட்புகமுடிய பையினுள் போடவும், அந்தப்பையை ஒரு தனி குப்பைதொட்டியிலோ அல்லது மருத்துவக்கழிவுகள் உள்ள ப்பைதொட்டியில் போடவேண்டும்..

3.  முக்கியம் 
பயன்படுத்திய முகக்கவசத்தை அப்புறப்படுத்த அதனை தொட்டு எடுக்கும் ஒவ்வொரு முறைக்கு பின்னரும் கிருமி நாசினி அல்லது சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை நன்றாக சுத்தமக கழுவ வேண்டும்..


மிகவும் பயனுள்ள இந்த விடியோவை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.. பயன்படுத்திய பின் முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் ..  விடியோவை இந்த லிங்கில்  தொடரவும்...

https://www.youtube.com/watch?v=72iNXEW0ZEA

சுகாதாரத்தை பேணுவோம் ... கொரோனாவில்  இருந்து பாதுகாப்பாக இருப்போம்...


No comments